டான்ஹோடா

TANHODA Logo

அரசு ஆணை எண்.396, வேளாண்மை (தோக1) நாள் 06.08.2004ன் படி தமிழ்நாடு அரசு டான்ஹோடா நிறுவனம் புதிதாக ஏற்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975ன் கீழ் 11.04.2005 அன்று டான்ஹோடா பதிவு செய்யப்பட்டுள்ளது. டான்ஹோடா  நிறுவனம்  ஆளுகைக்  குழுவினால்  நிர்வகிக்கப்படுகிறது.

ஆளுகைக் குழு

 

வ.எண்திட்டம்நிதி உதவி
மத்திய அரசுமாநில அரசு

1

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலர் வேளாண்மை துறை 

 

15%

2

மேலாண்மை இயக்குநர், டான்ஹோடா மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையர் 

50%

40%

50%

35%

3

வேளாண்மை இயக்குநர் 

100%

--

4

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர் 

100%

--

5

நிதிக் துறையின் பிரதிநிதி 

----

100%

6

ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் 

--

100%


நோக்கம்

1) தோட்டக்கலையில் உயர் தொழில்நுட்பம் மற்றும் துல்லிய பண்ணையம் ஆகியவற்றை ஊக்குவித்தல்.

2) தோட்டக்கலை  வளர்ச்சிக்காக  பொது மற்றும் தனியார் பங்காளிப்பை  ஊக்குவித்தல்.

3) விவசாயிகள் மற்றும் விரிவாக்கப் பணியாளர்களிடையே தோட்டக்கலை நவீன தொழில்நுட்பங்களை  பரப்புதல்.

4) அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தாய்வழி நடவுச் செடிகளை உற்பத்தி செய்து விநியோகித்தல்.

 5) தோட்டக்கலை வளர்ச்சி திட்டங்கள், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம் ஆகியவற்றின்  கீழ் உள்ள திட்டங்களை செயல்படுத்திட பல்வேறு விதமான அமைப்புகளிலிருந்து நிதி உதவி பெற்று தோட்டக்கலை வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுதல். 

செயல்பாடுகள் 

1) தமிழ்நாட்டில் பல்வேறு தோட்டக்கலை வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திட டான்ஹோடா ஒரு சிறப்பு நோக்க அமைப்பாக செயல்படுகிறது.

2) மத்திய மற்றும் மாநில அரசு துறைகள் உட்பட பல்வேறு விதமான அமைப்புகளில் இருந்து நிதி உதவி பெறுதல்.

3) அரசுத்துறைகள் சார்பாக வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல் 

4) அரசுத் துறை சார்பாக பயிற்சி நிலயங்களை உருவாக்கி நடத்துவதற்கு உதவி செய்தல்.

5) தேசியத் தோட்டக்கலை இயக்கத்தின் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்துதல்.

6) மேற்கூறப்பட்ட இதுபோன்ற பல்வேறு திட்டங்களை எடுத்து செயல்படுத்துதல்.

 7) தற்பொழுது தேசியத் தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர் பாசனத்திட்டம், தேசிய மூங்கில் திட்டம், தேசிய மருத்துவப் பயிர்கள் இயக்கம், நீர்வள நில வளத் திட்டம், பெருநகர காய்கறித் தொகுப்பு வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களை செயல் படுத்துவதோடு அரசுத் தோட்டக்கலை பண்ணைகள், மற்றும் பூங்காக்களை நிர்வகித்து வருகிறது. 

 

மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதிபகிர்வுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

தேசிய தோட்டக்கலை இயக்கம்

தேசிய தோட்டக்கலை இயக்கமானது மத்திய அரசின் முக்கிய திட்டமாகும்,  மத்திய மாநில அரசுகளின் 85:15 விகிதாச்சார நிதிப்பகிர்வில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டுமொத்த தோட்டக்கலை துறையின் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு அதிக வருவாய் தரும் தோட்டக்கலைப் பண்ணையின் பரப்பினை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் இயங்குகிறது,  தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டம் 2005-2006ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது,

இத்திட்டம் அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருப்பூர், இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது, அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பு விரிவாக்கம் நடவுப்பொருட்கள் உற்பத்தி, பழைய தோட்டங்களைப் புதுப்பித்தல், கிளை மேலாண்மை, பசுமைக்குடில் சாகுபடி, இயற்கைப் பண்ணையம், இயந்திரமயமாக்கல், மனிதவள மேம்பாடு,  அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை, விற்பனை உள்கட்டமைப்பு ஏற்படுத்துதல் ஆகியன இத்திட்டத்தின் கூறுகளாகும். 2011-12ம் ஆண்டில் இத்திட்டம் ரூ.6572 இலட்சம் செலவில் 42096 எக்டர் பரப்பில் செயல்படுத்தப்பட்டது, 2012-13ம் ஆண்டில் இத்திட்டம் 50845 எக்டர் பரப்பில் ரூ.15000 இலட்சம் செலவினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது, 

தேசிய நுண்ணீர்ப்பாசன இயக்கம்

நம் மாநிலம் பாசன நீர்ப்பற்றாக்குறை மிகுந்த மாநிலமாகும்.  வழக்கமான பாசன முறைகள் அதிக நீரை உபயோகிப்பதால் பாசன நீர் விரயத்திற்கு வழிவகுக்கின்றன.  நிலமேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் வள ஆதாரங்களை சிறந்த முறையில் உபயோகிக்க நவீன நுண்ணீர்ப்பாசன அமைப்புகளான சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் அமைப்புகளே சிறந்த வழிமுறையாகும்.  வேளாண் பயிர்களுக்கான பயனாளிகள் வேளாண் துறை மூலமும் தோட்டக்கலைப் பயிர்களுக்கான பயனாளிகள் தோட்டக்கலைத்துறை மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  மரப்பயிர்களுக்கான பயனாளிகள் வேளாண் பொறியியல் துறை மூலமும் கரும்பிற்கான பயனாளிகள் விவசாயிகள் பதிவு செய்துள்ள சர்க்கரை ஆலைகள் மூலமும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
 
இத்திட்டத்தின் கீழ் அனைத்து தோட்டக்கலைப்பயிர்களுக்கும் மற்றும் வேளாண் பயிர்களான கரும்பு, தென்னை பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் பயறு வகைப்பயிர்களுக்கும் சொட்டு நீர்/தெளிப்பு நீர் அமைப்புகளை நிறுவ சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் வழங்கப்படுகிறது.  இத்திட்டம் பதிவு பெற்ற நுண்ணீர்ப்பாசன நிறுவனங்கள் மூலமே செயல்படுத்தப்படுகிறது.  2011-12 ஆம் ஆண்டில் இத்திட்டம் 27550 எக்டர் பரப்பில் ரூ. 8744 இலட்சம் செலவில் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்பட்டது.  2012-13 ஆம் ஆண்டில் இத்திட்டம் ரூ. 41000 இலட்சம் செலவில் 70000 எக்டர் பரப்பில் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
 

மத்திய அரசின் 100 சத நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

தேசிய மூங்கில் இயக்கம்

காகித தொழிற்சாலை, வீட்டு உபயோக பொருட்கள், வரைகலை உபயோகம் போன்ற துறைகளில் மூங்கில் ஒரு முக்கிய மூலப் பொருளாகும்.  சுமார் 1500 பயன்பாடுகளை கொண்ட மூங்கில் ஒரு விரைவாக வளரக்கூடிய தாவர இனத்தை சேர்ந்தது.   மின்உற்பத்தியில் உயரியப்பொருண்மையாக மூங்கிலின் உபயோகம் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகின்றது  மூங்கிலின் பரப்பு மற்றம் உற்பத்தித்திறனை உயர்த்தும் நெடு  நோக்கில் தேசிய மூங்கில் இயக்கம் துவங்கப்பட்டது.  2011-12 ஆம் ஆண்டில் ரூ. 40 இலட்சம் செலவில் 250 எக்டர் பரப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.  2012-13 ஆம் ஆண்டில் 400 எக்டர் பரப்பில் ரூ.70 இலட்ச நிதியில் இத்திட்டம் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.


தேசிய மூலிகைப் பயிர் இயக்கம்
 
தமிழ் நாட்டில்  தற்போது அதிகரித்து வரும் இயற்கை மூலிகைப் பயிர்  தாவர பொருட்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்,  தேசிய மூலிகைப் பயிர் இயக்கத்தின் மூலமாக மூலிகைப் பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.           2011-12 ஆம் ஆண்டில் இத்திட்டம் 3774 எக்டர் பரப்பில் ரூ.918 இலட்சம் செலவினத்தில் செயல்படுத்தப்பட்டது.  2012-13 ஆம் ஆண்டில் இத்திட்டம் ரூ1200 இலட்சம்   செலவில்  5000 எக்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்

தமிழகத்தில் 49அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கீழ் இயங்கி வருகிறது.  அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் இனச் சுத்தம் உள்ள நடவு பொருட்களாக முக்கிய பயிர்களில் மா,  நெல்லி, சப்போட்டா, கொய்யா, பலா மற்றும் இதர பழப் பயிர்களும் மேலும் அலங்காரச் செடிகள், பணப்பயிர்களான முந்திரி, காப்பி பயிர்களின் நடவுப் பொருட்கள் உற்பத்தி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்தப் பண்ணைகள் மாதிரி செயல் விளக்க பண்ணைகளாகவும் செயல்படுகிறது.  2011-12 ஆம் ஆண்டில்  170.45 இலட்சம் நடவுச் செடிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முழுமையாக சாதனை அடையப்பட்டு உள்ளது,  2012-13 ஆம் ஆண்டில்  178  இலட்சம் நடவுச் செடிகளும் உற்பத்தி செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

டான்ஹோடா