டான்கோப்

TANHOPE Logo

தமிழ்நாடு தோட்டக்கலைப் பொருட்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனம் வரையறுக்கப்பட்டது (டான்ஹோப்)

 

இக்கூட்டுறவு  சங்கம், தமிழ்நாடு கூட்டுறவு  சங்கங்களின் சட்டத்தின் 1983 கீழ் 21.10.1994 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு விவசாயி ரூ.100 உறுப்பினர் சந்தாவாக செலுத்தி  இச்சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 

தற்போது நிர்வாகம் 14 நிர்வாகக்குழு இயக்குநர்களை கொண்டு இயங்கி வருகிறது. 

3931 தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 

தேர்ந்தெடுக்கப்பட்ட  உறுப்பினர் தலைவராகவும்  மற்றும்  தோட்டக்கலை  இணை இயக்குநர் இதன் மேலாண்மை இயக்குநராகவும் உள்ளனர்.

 

குறிக்கோள் 

1) தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தியை ஊக்குவிப்பது 

2) பழங்கள்,  காய்கறிகளை  நவீன  முறையில்  விநியோகம்  செய்ய  வழிவகை  செய் வகையில்  தரம்  பிரித்தல்  மற்றும்  ஏற்றுமதிக்கான  வசதிகளை  ஏற்படுத்துதல் 

3) கூட்டுறவு  முறையில்  சில்லரை  விற்பனை  கடைகள்  மூலம்  விற்பனை மேற்கொள்ளுதல்,  பதனிடப்பட்டும்,  பதனிடப்படாமலும்  உள்ள  பொருட்களை  ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்தல் .

 4) அரசு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், கழகங்கள் மற்றும் உணவகங்களுக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர தோட்டக்கலைப் பொருட்களை கடனாகவோ அல்லது முழுத்தொகை பெற்று வழங்குதல். 

 

செயல்பாடுகள்

1) தோட்டக்கலைத்துறை  மற்றும்    வேளாண்மைத்துறைக்கு ( நீரில் கரையும் உரங்கள் மட்டும்) தேவையான இடுபொருட்களை கொள்முதல்   செய்து   2007-08 முதல்  2012-13 வரை டான்ஹோப் வழங்கியுள்ளது. 

2) விவசாயிகள்  தங்கள்  விளைபொருட்களை  நியாயமான  விலையில்  விற்பனை  செய்ய  ஏதுவாக  தனியாருடன்  இணைந்து  டான்ஹோப்  கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

3) சேலம்  மற்றும்  ஒட்டன்சத்திரத்தில்  அமைக்கப்பட்டுள்ள  கொள்முதல் மையங்கள் மூலம்  நியாயமான  விலையில்  காய்  மற்றும்  கனி  வகைகள் கொள்முதல்  செய்து அரசு  நிறுவனங்கள்,  கூட்டுறவு  சங்கங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், கழகங்கள்  மற்றும் உணவகங்களுக்கு  பழங்கள்,  காய்கறிகள்  மற்றும்  இதர தோட்டக்கலைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.


டான்கோப்