சிறப்பு நோக்க அமைப்பு –SPV (டான்ஹோடா)

 

அரசு ஆணை எண்.227 வேளாண்மை (தோ.க.1) துறை நாள்14.11.2013ன் படி தரமான வேளாண்மை, தோட்டக்கலை இடுபொருட்கள் மற்றும் நீரில் கரையும் உரங்கள் கொள்முதல் செய்து விநியோகம் செய்ய சிறப்பு நோக்க அமைப்பாக டான்ஹோடா செயல்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

ரூபாய் ஐம்பது  கோடியை (ரூ.50 கோடி) வட்டியில்லா சுழல் நிதியாக திரவ உரங்கள் மற்றும் விதைகளைக் கொள்முதல் செய்ய அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு அத்தொகை டான்ஹோடா சிறப்பு நோக்க அமைப்பு கணக்கில் வைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

டான்ஹோடாவின் ஆளுகைக் குழு இந்த சிறப்பு நோக்க அமைப்பிற்கு அதிகாரக் குழுவாக செயல்படும்.அதிகாரக் குழுவிற்கு உதவிட கூடுதல் இயக்குநர் (தோட்டக்கலை) அவர்களின், தலைமையிலான இரு தொழில் நுட்பக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.