Thursday 25th Apr 2024
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
முகப்பு | கூட்டு பண்ணையம்

G.O's | Scheme Guidelines | Scheme Components

கூட்டு பண்ணையம்

சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் அவர்களை ஒருங்கிணைத்து, கூட்டுப் பண்ணைய முறையை ஊக்குவித்தல், ஒருங்கிணைந்த கடன் வசதி பெறுதல், சிறந்த தொழில்நுட்ப முறைகளை பின்பற்றுதல், முன் மற்றும் பின் சந்தை இணைப்பு தொடர்புகளை ஏற்படுத்துதல் முதலியவற்றை மேற்கொள்வதற்கான உன்னத திட்டத்தினை தமிழக அரசு 2017-18ம் ஆண்டில் சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது.

இத்திட்டத்தில் 2017−18 மற்றும் 2019-20ஆம் ஆண்டிகளில் தோட்டக்கலைத் துறையின் கீழ் மட்டும் ரூ.76.09 கோடி நிதியில் ஆயிரத்துப் பத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு சாகுபடிக்கு தேவையான 6,967 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பு 2020-21 ஆம் ஆண்டிலும், தோட்டக்கலைத்துறையின் கீழ் மட்டும் 600 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு விவசாயத்திற்கான இயந்திரங்கள் வழங்க ரூ. 30.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Original text