change colors

#86bc42
#8373ce
#14d4f4
#72284b

Custom colors


change Font

Thursday 30th Nov 2023
|
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
Tanhoda Logo Millets Logo Kalaingar 100 Logo
முகப்பு | பட்டயப் படிப்பு மற்றும் பயிற்சி மையங்கள்

தோட்டக்கலை பயிற்சி மையம்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஏழு பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. அவை தமிழ் நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையம், சென்னையில் மாதவரத்திலும், தோட்டக்கலை பயிற்சி நிலையம், புதுக்கோட்டையில் குடுமியான்மலையிலும், உழவர் பயிற்சி நிலையம், நீலகிரியில் உதகமண்டலத்திலும், தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ,கிருஷ்ணகிரியில் தளியிலும் ,பாரம்பரிய மலர் பயிர்களுக்கான மகத்துவ மையம், மதுரையில் திருப்பரங்குன்றத்திலும், மற்றும் வெப்ப மண்டல பழப்பயிர்களுக்கான மகத்துவ மையம், திருச்சியில் கஞ்சநாயக்கன்பட்டியிலும் இயங்கி வருகிறது.

விவசாயிகளுக்கு தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி வழங்குவதே இம்மையங்களின் முக்கிய நோக்கமாகும்.

ஈராண்டு தோட்டக்கலைப் பட்டயப் படிப்பு

தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையம், மாதவரம், சென்னை, தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் தளி, கிருஷ்ணகிரி மற்றும் காய்கறி மகத்துவமையம் ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் ஆகிய நிலையங்களை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்துடன் இணைத்து அங்கிகாரம் பெற்று, இந்நிலையங்களின் மூலமாக ஈராண்டு பட்டயப்படிப்பு ஆண்டு தோறும் தலா 50 மாணவர்களுக்கு பயிற்று விக்கப்பட்டு வருகிறது.