change colors

#86bc42
#8373ce
#14d4f4
#72284b

Custom colors


change Font

Sunday 01th Oct 2023
|
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
Tanhoda Logo Millets Logo Kalaingar 100 Logo
முகப்பு | ஒமாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம்(SHDS)

G.O's | Scheme Guidelines | Scheme Components

மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம்(SHDS)

• மாநில தோட்டக்கலை வளர்ச்சித்மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் முக்கியமான நோக்கமே, தோட்டக்கலைத் துறையின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகை செய்வதேயாகும்.

• இத்திட்டமானது 100 சதவீதம் தமிழக அரசின் பங்களிப்புடன்செயல்படுத்தப்பட்டு வருகிறது.

• இத்திட்டமானது தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் குறிப்பாக தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படா மாவட்டங்களாகிய செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், கரூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி மற்றும் விருதுநதர் முதலிய மாவட்டங்களில்சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

• திட்டத்திற்கேற்றாற்போல் மற்றும் திட்ட இனங்களின் அடிப்படையில் பின்வரும் இனத்திட்டங்களுக்குநிதியுதவி வழங்கப்படுகிறது

தோட்டக்கலைபயிர்களின்சாகுபடி மற்றும் பரப்பு விரிவாகம் குறிப்பாக தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படாத மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.(பழங்கள், காய்கறிகள், சுவைதாளித பயிர்கள், மலர்கள் )

பாதுகாக்கப்பட்ட சூழலில் சாகுபடி செய்யும் முறைகளான பசுமை குடில், நிழல் வலை கூடம் அமைத்து சாகுபடி. (தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படாத மாவட்டங்களில்)

அறுவடைப் பின்செய் முறைகளான முதன்மை பயிர்களுக்கான செயல்பாட்டு உள்கட்டமைப்புமற்றும் குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைத்தல்.

தமிழகத்தின் ஊட்டச்சத்து பாதுகாப்பினை அதிகரிக்க, வீடுகளிலேயே தோட்டம் அமைக்க காய்கறி விதை தளைகள், மாடித்தோட்ட தளைகள் மற்றும் ஊட்டச்சத்துதளைகள்அனைத்து மாவட்டங்களிலும் (நீலகரி தவிர) விநியோகம் செய்தல்.

தோட்டக்கலை பயிர்களுக்கான, சிறப்பு யிர் குறித்த நுட்பங்கள் செயல்படுத்தல் (முட்டுக்கொடுத்தல்/தட்டிதள்)

கூடுதல் வருமானம் ஈட்டும் செயல்பாடுகள் (காளான் வளர்ப்பு கூடம்).

காய்கறி பயிர்களுக்கான சாகுபடி ஊக்கத்தொகை வழங்குதல்.

தோட்டக்கலைக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் செய்தல்.

• டெல்டா விசாயிகளுக்கு தென்னை மற்றும் பாக்கு பயிர்களில் நிலையான வருவாய் ஈட்டுவதற்கும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் பல அடுக்கு பயிர் முறை ஊக்குவிக்கப்படுகிறது.