change colors

#86bc42
#8373ce
#14d4f4
#72284b

Custom colors


change Font

Saturday 20th Apr 2024
|
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
Tanhoda Logo
முகப்பு | நுண்ணீர் பாசனம்

G.O's | Scheme Guidelines | Scheme Components

நுண்ணீர் பாசனம்

நுண்ணீர் பாசன தொழில் நுட்பமானது, உற்பத்தி திறனை பெருக்குவது மற்றும் பாசன நீரை சேகரிப்பதன் மூலம் வேளாண்மையில் பெரும் பங்காற்றுகிறது. நிலத்தடி நீரை பாதுகாப்பதாலும், வேளாண் உற்பத்தி பெருக்குவதாலும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாலும், நுண்ணீர் பாசனம் தொழில் நுட்பம் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மகசூல் மற்றும் விளைபெருட்களின் தரத்தை உயர்த்துவதால் சொட்டுநீர் பாசனம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில், சொட்டுநீர் பாசன அமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.

நுண்ணீர் பாசனம் தொழில்நுட்பம் மூலம் உபயோகிக்கும் திறனை அதிகரித்து 40-60 சதவீதம் வரையிலாள நீரினை சேமிக்க முடியும். இத்தொழில் நுட்பத்தின் மூலம் பயிருக்கு வழங்கும் நீரின் வாயிலாகவே உரத்தினையிம் அளித்திட முடியும். இதன் மூலமாக பயிர்களின் வேர்களுக்கே உரத்தினை வழங்கி உர பயன்பாட்டு திறனையும் அதிகரிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் தற்போது சிறு / குறு விவசாயிகளக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிதம் மானியமும் வழங்கட்பபடுவதோடு, சரக்கு மற்றும் சேவை வரியினை அரசே ஏற்றுக்கொண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு மூலம் எளிதாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும், சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மட்டும் குழாய் பதிக்க பள்ளம் தோண்டுவதற்காக ஊக்கத்தொகையாக எக்டருக்கு ரூ.3000/- வழங்கப்படுகிறது.