change colors

#86bc42
#8373ce
#14d4f4
#72284b

Custom colors


change Font

Friday 26th Apr 2024
|
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
Tanhoda Logo
முகப்பு | தேசிய தோட்டக்கலை இயக்கம்

G.O's | Scheme Guidelines | Scheme Components

தேசிய தோட்டக்கலை இயக்கம்

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம் அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருப்பத்தூர், திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம் போன்ற 26 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மா, வாழை, பப்பாளி, கொய்யா, முந்திரி, கோகோ, வீரிய ரக காய்கறிகள், மிளகாய், மஞ்சள், மிளகு, மலர்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பு விரிவாக்கம் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நீர் சேமிப்பு அமைப்புகள், பசுமை குடில் அமைத்தல், இயற்கை வேளாண்மை, இயந்திரமயமாக்கல், சிப்பம் கட்டும் அறை, சிறிய அளவிலான வெங்காய சேமிப்பு கிடங்கு, குளிர்பாதன கிடங்கு, நடமாடும் விற்பனை வண்டி, சில்லறை சந்தை மற்றும் குளிரூட்டப்பட்ட போக்குவரத்து வாகனம் போன்ற இனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தோட்டக்கலை இணை / துணை இயக்குனர் தலைமையில் மாவட்ட இயக்கக் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.