Sunday 14th Aug 2022
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
முகப்பு | தேசிய மூங்கில் இயக்கம் (NBM)

தேசிய மூங்கில் இயக்கம் (NBM)

மூங்கில் பல வகைப் பயன்பாட்டுகளை கொண்டது. அது சுற்றுசூழல், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த பங்கு அளிக்கிறது. இந்தியாவில் மூங்கில் பரப்பு 13.96 மில்லியன் எக்டர் ஆக உள்ளது. இந்தியா இரண்டாவது பணக்கார நாடு என்ற பெருமையை சீனாவுக்கு அடுத்தப்படியாக பெற்று உள்ளது. இந்தியாவில் மூங்கில் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, இந்தியாவில் பரப்பு விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பரப்பு விரிவாக்கம் மற்றும் வணிகம் செய்வது இன்றியமைததாக உள்ளது.

வனமில்லா நிலங்களில் மூங்கில் பரப்பு அதிகரிப்பதற்காக அரசு, பொது மற்றும் தனியார் நிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. அறுவடைக்கு பின் மேலாண்மையான மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பம், மற்றும் மூங்கில் விழிப்புணர்ச்சிக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 60% (மத்திய அரசு) 40% (மாநில அரசு) மானியத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் பொது நிலங்களில் – 100% மானியமாக ரூ.1 இலட்சம்/எக்டர் மூன்று வருடங்களுக்கு மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

தனியார் நிலங்களுக்கு 50% மானியமாக ரூ.50,000/எக்டர் மூன்று வருடங்களுக்கு மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

Original text