change colors

#86bc42
#8373ce
#14d4f4
#72284b

Custom colors


change Font

Thursday 25th Apr 2024
|
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
Tanhoda Logo
முகப்பு | பயிர் காப்பீடு (PMFBY)

G.O's | Scheme Guidelines | Scheme Components

பயிர் காப்பீடு (PMFBY)

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை 2016 ஆம் ஆண்டு காரீப் பருவம் முதல் சென்னை தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட குறு வட்டாரங்களில், அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். இதுவரையில் (2016-17 முதல் 2019-20 வரை) பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தோட்டக்கலை பயிர்களில் காப்பீடு செய்த விவசாயிகளில், 1,39,055 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.210 கோடி வழங்கப்பட்டுள்ளது.

2019-20 ஆண்டில் ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்ட வாழை, மரவள்ளி, மஞ்சள், மிளகாய் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர்களுடன், ஓராண்டு பயிர்களான, வெண்டை, கத்தரி, முட்டைகோஸ், கேரட், இஞ்சி, பூண்டு, தக்காளி, கொத்தமல்லி ஆகிய பயிர்களுக்கும், காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக அளவிலான தோட்டக்கலை விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.