change colors

#86bc42
#8373ce
#14d4f4
#72284b

Custom colors


change Font

Sunday 01th Oct 2023
|
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
Tanhoda Logo Millets Logo Kalaingar 100 Logo
முகப்பு | பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம்

G.O's | Scheme Guidelines | Scheme Components

பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம்

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் என்பது உலக வங்கி நிதியில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பன்னோக்குத் திட்டமாகும். தேர்வு செய்யப்பட்ட உபவடிநீர் பகுதிகளில் உயர் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் நீர் சேமிப்பு தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலம், அதிக நீர் தேவைப்படும் பயிர்களில் அதிக வருவாய் மற்றும் குறைந்த நீர் தேவைப்படும தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை தீவிரப்படுத்துவதே திட்டத்தின் முக்கிய நோக்கம்.

32 மாவட்டங்களில் 66 உபவடி நீர்ப்பகுதிகளில் ரூ.210.00 கோடி செலவில் நுண்ணீர்ப் பாசனத்துடன் பழங்கள், கலப்பின காய்கறிகள், நறுமணப்பயிர்கள் மற்றும் பூ சாகுபடி ஆகியவற்றை செயல் விளக்கங்கள் 2018-19 முதல் 2023-24 வரையிலான 6 ஆண்டுகளில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு திட்டம் (2018-19):

காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், தர்மபுரி, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.1762.677 இலட்சம் நிதியில் செயல்படுத்தப்பட்டது.

இரண்டாம் ஆண்டு திட்டம் (2019-20):

2019-20 ஆம் ஆண்டில் இந்த திட்டம் பின்வருமாறு செயல்படுத்தப்படுகிறது.

வ.எண் கட்டம் கட்ட செலவு (லட்சத்தில்)
1. முதல் கட்டம் இரண்டாம் ஆண்டு 1221.955
2. இரண்டாம் கட்டம் முதல் ஆண்டு 2673.740
மொத்தம் 3895.695

மூன்றாம் ஆண்டு திட்டம் (2020-21):

2020-21 ஆம் ஆண்டில் இந்த திட்டம் பின்வருமாறு செயல்படுத்தப்படுகிறது.

வ.எண் கட்டம் கட்ட செலவு (லட்சத்தில்)
1. முதல் கட்டம் மூன்றாம் ஆண்டு 1286.435
2. இரண்டாம் கட்டம் இரண்டாம் ஆண்டு 1610.664
3. மூன்றாம் கட்டம் முதலாம் ஆண்டு 1076.075
மொத்தம் 3973.174