1. நுண்ணீர் பாசனம் என்றால் என்ன?
நுண்ணீர் பாசனம் என்பது பாசன நீரை சிக்கனமாகவும் துல்லியமாகவும் பயன்படுத்தி உற்பத்தி மற்றும் வருமானத்தை பன்பமடங்காக உயர்த்துவதாகும்.
2. நுண்ணீர் பாசனம் பெற எங்கு அணுகுவது?
https://tnhoriculture.tn.gov.in:8080 என்ற வலைதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
3. நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான ஆவணங்கள்?
ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா, அடங்கல், சிறு / குறு விவசாயியாக இருப்பின் அதற்கான சான்றிதழ் வங்கி கணக்கு புத்தக நகல், நில வரைபடம் , நீர் மற்றும் மண் பரிசோதனை அறிக்கை ஆகியவை தேவையான ஆவணங்களாகும்.
4. இத்திட்டத்தில் பயனடைய சிறு / குறு விவசாயிக்கான அதிகட்ச வரம்பு என்ன?
சிறு / குறு விவசாயி அதிகட்சமாக 2.00 எக்டர் (5 ஏக்கர்) வரை அரசு நிர்ணயித்த தொகையில் 100% மானியத்தில் பயன் பெறலாம்.
5. இத்திட்டத்தில் பயனடைய பெரு விவசாயிக்கான அதிபட்ச வரம்பு என்ன?
பெரு விவசாயி அதிகபட்சமாக 5.00 எக்டர் (12.5 ஏக்கர்) வரை அரசு நிர்ணயித்த தொகையில் 75% மானியத்தில் பயன் பெறலாம்.
6. ஒரு முறை நுண்ணீர் பாசனம் அமைத்தால் மீண்டும் அதே நிலத்திற்கு அடுத்த மானியம் எப்போது பெற முடியும்?
ஒரு முறை நுண்ணீர் பாசனம் அமைத்த பிறகு மீண்டும் 7 வருடங்கள் கழித்து புது பாசன அமைப்பை மானியமாக பெறலாம்.
7. நுண்ணீர் பாசன விண்ணப்பத்தின் நிலை குறித்து எவ்வாறு அறிவது?
நுண்ணீர் பாசனம் குறித்த ஒவ்வொரு நிலையின் போதும் சம்மந்தப்பட்ட விவசாயிக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் தகவல் தெரிவிக்கப்படும் மற்றும் https://tnhoriculture.tn.gov.in:8080 என்ற வலைதளத்தின் மூலமாக விண்ணப்ப எண் (அ) ஆதார் எண் (அ) சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துகொள்ளலாம் அல்லது தங்களது பகுதி வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம்.
8. சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீரில் சிறந்த பாசன முறை எது?
இரண்டு பாசன முறையுமே சிறந்ததாகும் தெளிப்பு நீரை காட்டிலும் சொட்டுநீர் பாசனம் நேரடியாக செடிகளின் வேர்களுக்கு நீரை கொண்டு செல்வதால் நீர் தேவை மிகவும் குறைவாகும்.
9. விவசாயியின் பங்குத்தொகை என்பது என்ன?
விவசாயியின் பங்குத்தொகை என்பது பெருவிவசாயிகள் 75% சதவித மான்யத்தில் விண்ணப்பிம்கும்போது மீதமுள்ள 25% தொகை மற்றும் தேவைப்படும் கூடுதல் பொருட்களின் செலவானது விவசாயி பங்குத் தொகையாகும்.
10. விவசாயியின் பங்குத்தொகையை எவ்வாறு செலுத்துவது?
https://tnhorticulture.tn.gov.in:8080/Subsidy/PayFarmerContribution என்ற வலைதளத்தின் மூலமாக சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு செலுத்தலாம்.
11. நுண்ணீர் பாசனம் யாரால் நிறுவப்படும்?
தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை அங்கீகரித்துள்ள நிறுவனம் மூலம் நிறுவப்படும். (விவசாயியே நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம்)
12. நுண்ணீர் பாசன முறையில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சரி செய்யப்படுமா?
ஆம், நுண்ணீர் பாசனம் அமைத்த நிறுவனத்தின் மூலமாக சேவை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படும்.
13. நுண்ணீர் பாசன முறையில் பழுது ஏற்பட்டால் அதை எவ்வாறு நிறுவனத்திற்கு தெரிவிப்பது?
நுண்ணீர் பாசன நிறுவன இலவச அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகவும்.
14. உப்பு நீருக்கு சொட்டுநீர் பாசனம் உகந்ததா?
நீரின் மின் கடத்தும் திறன் 2 mS/cm க்கு குறைவாக இருக்க வேண்டும். பயிர் இல்லாதபோது நுண்ணீர் பாசன நிறுவனம் அல்லது துறை அலுவலர் வழிகாட்டுதலின்படி அமில சுத்திகரிப்பு செய்து உப்பினால் ஏற்படும் அடைப்புகளை நீக்கலாம்.
15. உரங்களை நுண்ணீர் பாசனம் வழியாக செலுத்தலாமா?
ஆம், நீரில் கரையும் உரங்களையும் திரவ வடிவலான உரங்களையும் நுண்ணீர் பாசன அமைப்பபு வழியாக செடிகளின் வேர் பகுதிக்கே கொண்டு செல்லலாம்.
16. இயற்கை முறை உரங்களை நுண்ணீர் பாசனம் வழியாக செலுத்தலாமா?
ஆம், திரவ வடிவலான உரங்களை நுண்ணீர் பாசனம் வழியாக செலுத்தலாம்,
17. மேலும் ஆலோசனைக்கு அல்லது புகார்களுக்கு எங்கு அணுக வேண்டும்?
இலவச தொலைபேசி எண்ணான 1800 425 4444 (அல்லது) https://tnhorticulture.tn.gov.in:8080/Subsidy/Feedback என்ற வலைத்தளத்தை அணுகலாம்.